பக்கம்:கனிச்சாறு 7.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


134

பொங்கல் படையல்!


உள்ளமெனும் பானையிலே எண்ணப்பால் ஊற்றி
உயர்கருத்தாம் நல்லரிசி தீட்டியுலை யிட்டுக்
குள்ளமன மக்களிங்குக் கூட்டிவைத்துச் சேர்த்த
கொடுஞ்சாதி விறகடுக்கி, மானத்தீ வைத்து,
விள்ளரிய சுவைநல்குந் தமிழ்க்கனிச்சாற் றோடு
விழுப்பமெனும் நெய்யளவி நறும்பொங்கல் பொங்கிக்
கள்ளமிலா நெஞ்சுடைய நற்றமிழர்க் கிந்நாள்
களிப்பெழவும் விழிப்பெழவும் படையல்செய் வோமே!

-1960
 

135

நாடு வளம்பெற வாழிய!


இருந்தழிந் தின்றைக் கெழுந்தொளிர்ந்
தோங்கும் இனித்ததமிழ்
அருந்தனித் தாயை அழகுறச் செய்யும் அறிவியல்நூல்
மருந்தியல், விண்ணியல் என்றிவை
மேன்மேல் மலிந்துயர்ந்து
வருந்தமிழ் நாடு வளம்பெற வாழிய! வாழியவே!!

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/223&oldid=1447061" இலிருந்து மீள்விக்கப்பட்டது