பக்கம்:கனிச்சாறு 7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

கனிச்சாறு ஏழாம் தொகுதி

திரு.சாத்தையா (திரு. தமிழ்க்குடிமகன்) அவர்கள், தாம் சொல்லிச்சென்ற அளவுதொகை அனுப்பாமல் குறைந்த அளவு அனுப்பியமையால் அவர்க்கு ஐயா அவர்கள் தம் நிலை குறித்தெழுதிய பாடல் இது.

15. பாக்களை நூறு நூறாக வெளிப்படுத்தும் ஆசிரியரின் உள்ள உணர்வு ஒளியை விளக்குவது இப்பாடல்.

16. 1960-62 இடையிட்ட ஆண்டுகளில் தென்மொழி இதழ் நின்றுபோய் மீண்டும் தொடர அரும்பாடுபட்டு வந்தபொழுது, புதுவையில் ஓரளவு செல்வ நிலையில் இருந்த ஓரன்பர் தாம் துணைநின்று, அதனைத் தொடங்குவிப்பதாய்க் கூறி, ஓராண்டுக்காலம் அடிக்கடி அழைத்துப் பொழுதை வறிதே போக்கி, இறுதியில் நம்பிக்கை தவிர்த்தார். அவரை நொந்து ஐயா எழுதியது இது.

17. உலகில் உள்ள இயற்கைப் போக்குக்கு முரணான மக்களைக் குறித்து வருந்தி பாடிய பாடல் இது. தென்மொழியில் வெளிவராத பாடல் இது.

18. ஆசிரியரின் உள்ளம், உணர்வு, விழிகள், செவிகள், பேச்சுகள், வாழ்க்கை அனைத்தும் அனைவர்க்கும் திறந்த பொத்தகம். நண்பர் ஒருவர் மடல் தாளில் அச்சிடக் கேட்க எழுதிக் கொடுத்த பாடல் இது.

19. ஆசிரியரைப் பற்றிய தன்னிலை விளக்கப் பாடல் இது. அவர் பிறந்து வளர்ந்த சூழல், வாழ்க்கை அமைப்பு, கொள்கை, உரன், ஊக்கம், முயற்சி அனைத்தும் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் விளக்கப் பெற்றிருக்கின்றன, இதில்.

20. `பாவலரேறுவின் வாழ்க்கை பற்றிய சிறு விளக்கம்.

21. ஆசிரியர், தாம் சிலருக்கு வேண்டாதவராக, வெறுக்கத்தக்கவராக, கொள்கை நிலையில் மறுக்கத்தக்கவராக இருப்பினும் தமக்கென வேண்டாதவர் ஒருவருமிலர் என்றுரைக்கும் இனிய பாடல் இது. தம்மைப் பிறர் வேண்டாத விரும்பாத ஒவ்வொரு தன்மைக்கும் இயற்கைப் பொருள் ஒவ்வொன்றினை உவமை கூறி விளக்கும் தன்மை இனிமை தருவது; சுவை பொதுளியது.

22. என்றும் அழியாத பாடல்.

23. எண்ணங்கள் நிலையானவை; ஆனால் சுழற்சியுடையவை. அவை தேவையானபொழுது தேவையான அளவு வெளிப்படுகின்றன. இந்த அரிய மெய்ப்பொருள் உண்மை இப்பாட்டில் எளிய முறையில் கூறப் பெற்றுள்ளது.

24. என், நான் - என்று விளித்துப் பாவலரேறு அவர்கள் எழுதிய பாடல்களை யெல்லாம் பார்த்துச் சிலர், ஐயா - தன்னைப் பற்றியே எழுதிக் கொள்கிறார் என மறைமுகமாகக் குறைபேசத் தொடங்குகையில், அவற்றைக் கேள்வியுற்று அவற்றுக்கு விளக்கமாக எழுதிய பாடல் இது.

25. பாவலரேறு ஐயா அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டும், திரு.க.வெ. நெடுஞ்சேரலாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் 1972இல் வெளிவந்த ‘தீச்சுடர்’ எனும் மாத இதழில் முகப்புப்பாடலாக அமைந்த பாடல்.

26. ‘என்மொழி, என் இனம், என்நாடு நலிகையில், எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்’ என்று தமக்கென ஓர் உறுதியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/23&oldid=1445490" இலிருந்து மீள்விக்கப்பட்டது