பக்கம்:கனிச்சாறு 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

குறளடி வஞ்சிப்பா


பரவுசெங்கதிர்ப் பொன்னொளியெனு
மருகிடைச் செய மணியிளங்கொடி
பழனியப்பரைப் படர்ந்ததின்றுமன்,
முழவதிர்ந்திட மணம்புரிந்தன ரினிதே!
வாழ்க, வாழ்கவர்! இன்பம்
சூழ்க! இல்லறச் சுவைமிகப் பூத்தே!

-1956
 

145

வேங்கடேசன் - புட்பராணியம்மாள்.


வையகத்து நிற்கும் வளங்களெலாம் வந்தொருவற்
கையகத்து நிற்கும் கடிநாளாம் - துய்யகத்துப்
பேரிளமைத் தோகை பிணையும் பெருமணநாள்
சீரிளமைத் தோளனொடு சேர்ந்து.

தாழ்ந்திருக்கும் கண்ணின் தனிமயிலைத் தாழாக்கண்
ஆழ்ந்திருக்கும் ஆளான்; அதுவென்றும் - சூழ்ந்திருக்க,
தேனுதிர்க்குஞ் சொல்லியையும் தேடரிய செல்வனையும்
வானதிரப் பாடுகின்றோம் வாழ்த்து!

கற்றோரைப் போற்றிக் கடிந்துயிர்வாய் மெய்நோகப்
பெற்றோரைப் பேணிப் பெருந்தகைசேர் - உற்றோரைச்
சூழ்கநலஞ் சூழ்கவளஞ் சூழ்கபொலஞ் சூழ்கவென்றும்
வாழ்கவெனப் பாடுகின்றோம் வாழ்த்து.

-1957
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/233&oldid=1447087" இலிருந்து மீள்விக்கப்பட்டது