பக்கம்:கனிச்சாறு 7.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  189


146

உ.வே.பாலசுப்பிரமணியம் - துளசியம்மாள்.

கருத்துமணம், காதற் கலப்புமணம், செம்மைத்
திருத்தமணம் என்றமுறை தேர்ந்து - பொருத்தமொடு
செய்தகவே செய்தார்; சிறப்பும் பெருவளனும்
எய்துகவே என்று மிவர்க்கு.

-1958


147

மு.சாத்தையா செயலெட்சுமி.
தமிழ்க்குடிமகன் - வெற்றிச்செல்வி)


கோதிலகம் எழுந்துலவும் குறைவிறந்த அருளன்பின்
மீதிலகம் படுப்பவர்க்கு மணம்படுத்தார் மேதகவே
தீதிலகம் அருள்சுரந்து திளைப்பதன்றித் திரு. கல்வி
ஏதிலவன் குளிர்தமிழால்
இசைந்திசைந்து வாழ்த்துகையில்,

திருசுரக்க; தீதகல்க; தெளிந்தறிவின் மகரீக;
உருசுரக்க; தமிழ்மொழிபோல்
உயர்வடைகென் றுரைப்பேமா?

அறம்புரிக; அவர்சுமந்தார் அகமகிழப் புகழ்பெறுக;
மறம்புரிக; தமிழ்மொழிபோல்
உயர்வடைகென் றுரைப்பேமா?

ஓருயிரில் ஈருடலாய் உளமிசைந்தே உயர்வாழ்வின்
தேருருளைக் கச்செனவே திகழ்ந்திடுகென் றுரைப்பேமா?

எனவுரைக்கும்,

சளைப்பில் அன்பினன் சாத்தை யாவின்
உளக்குடி லேறிய உயர்செய லக்குமி
தன்னை மணந்த தகுதிரு மணவிழா
அன்னை மொழியை அரசமர்த் தும்விழா!
அவ்விழா வாழிய! அக்கால்
செவ்விதின் மணந்தார் சிறப்புற வாழ்கவே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/234&oldid=1447090" இலிருந்து மீள்விக்கப்பட்டது