பக்கம்:கனிச்சாறு 7.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  203


162

பேரா. ஆறு. அழகப்பனார் மகள்
திருமண வாழ்த்து!


வீறுதமிழ் வளர்க்கும் வியன்றமிழ் அறிஞர்
ஆறுஅழ கப்பரின் அருமைச் செல்வி
காவிரி நங்கையும் கண்ணனும் கூடும்
பூவிரி மணமகிழ் பொற்புடைத் திருமணம்
இனிதுநிறை வேறி இல்லறம் புதுக்கித்
தனிநலம் பெற்றுத் தமர்நலம் விழைந்து
செந்தமிழ் மொழியும் செழித்தநல் இனமும்
நந்தமிழ் நாடும் நலம்பெற உழைத்து
வளம்பெறு வாழ்வுடன் வாழ்வாங்கு வாழ
உளம்நிறை உணர்வுடன் உவப்புற வாழ்த்துவோம்!

-1982


163

இராணி - சந்திரன்.


பெரியார் தொண்டர் சக்தி மோகனின் அருமைச் செல்வி அரசித் திருமகள்

மலேசியத் தொண்டர் அரங்கையா அவர்களின் குலநலத் தோன்றல் குணந்திகழ் (சந்திரன்)நிலவன்

இருவரின் திருமணம் இனிதே நடந்து பெருமையிற் பொலிந்து பீடு பெறுகவே!

இனநலங் கருதும் இருபெருந் தலைவர்தம் இனவழித் தோன்றல்கள் இருவரும் ணைந்து

தமிழ்மொழி சிறக்கவும் தமிழினம் வாழவும் தமிழ்நிலம் தன்னர சுரிமை தாங்கவும்

மூச்சால் உயிரால் முழுஉடல் உழைப்பால் பேச்சால் பெருந்தொண் டாற்றிப் பெரும்புகழ்

சிறந்து விளங்கிச் சீரொடு வாழ்ந்திட நிறைந்த நெஞ்சொடு நீடுவாழ்த் துவமே!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/248&oldid=1447124" இலிருந்து மீள்விக்கப்பட்டது