பக்கம்:கனிச்சாறு 7.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


166

சுப்புரத்தினக் கவிஞன்
பாரதிதாசற்கிப் படைப்பு !


போற்றியென்றும் பாவாலே
பூக்குந் தமிழ்க்காவைப் பாவாலே எந்நாளுங்
காக்குந் தமிழாளுங் காவலன் தேக்கமுறுஞ்
சீரதிகஞ் சேர்புலமைச் சுப்புரத்தி னக்கவிஞன்
பாரதிதா சற்கி
ப் படைப்பு.

-1948 (?)
 


167

கொய்யாக்கனி’ நூலுக்குப் படையல்!


பன்மொழி இலக்கணப் பரவை குளிதெலா
நன்மொழி எனப்படும் நானில மொழிகளுள்
இன்மொழிப் பரலீ தெனக்கால் நிறுத்திய
தென்றமிழ் வாணர்ஞா. தேவநே யர்க்குப்
படையல் செய்தனன் பணிவொடும்
அடையும் மகிழ்வொடும் அவர்மா ணவனே.

-1956
 

168

தென்மொழி இதழின் முகப்புப் பாடல்!


‘கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை’ எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/253&oldid=1447130" இலிருந்து மீள்விக்கப்பட்டது