பக்கம்:கனிச்சாறு 7.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  209


169

‘தென்மொழி’ முதல் தொகுப்பிற்கு முன்னுரை!


மாலிருக்கும் நெஞ்சிற்கு மருந்தி ருக்கும்!
மலைத்திருக்கும் உளத்திற்கும் செழிப்பி ருக்கும்!
வேலிருக்கும் தோளார்க்கு வீறி ருக்கும்;
வித்திருக்கும்; விளைவிருக்கும்; செந்தமிழ்த்தீம்
பாலிருக்கும்; அன்பிருக்கும்! தமிழர்நாட்டின்
மேலிருக்கும் இருள்விலக்க ஒளியி ருக்கும்!
மேன்மையுறுங் கையிலிந்நூல் இருக்கு மன்றோ!

பல்சுவைசேர் கட்டுரையும் பாட்டும் உயர்பண்பின்
மல்குசுவைத் தேன்கதையும் மற்றும் தமிழர்க்கே
நல்கிவருந் தென்மொழியின் நல்ல தொகுப்பென்றால்
பில்கிவருந் தேனுமதன் பின்!

1960

 


170

‘பாவியக் கொத்து’ நூலுக்கு படையல்




{{left_margin|3em|<poem>பெற்றீர்; மகிழ்ந்தீர்; பெயரிட்டீர்; பீடுதமிழ்
கற்று மகிழநறுங் கல்விதந்தீர்; வற்றாத
அன்புமிகக் காட்டினீர்; அன்றன்றும் பாராட்டி
என்பும் நெகிழ எனைவளர்த்தீர்; பின்பு தமிழ்த்
தொண்டுசெயக் கண்டுந் துணைநின்றீர்; தூயவுளங்
கொண்ட துரைசாமி, குஞ்சம்மாள் உங்கட்கே
பூப்படையல் வாடிவிடும்; பொன்படையல் மங்குமென்று
பாப்படையல் செய்தேன் பணிந்து!

-1962

</poem>}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/254&oldid=1447131" இலிருந்து மீள்விக்கப்பட்டது