பக்கம்:கனிச்சாறு 7.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  227


195

‘ஏசுபிரான் பிள்ளைத்தமிழ்'
நூலுக்கு வாழ்த்து!


இறைவருக்குத் தாயாகி எந்தமிழ்க்குச் சேயாகி
ஏந்திமலர் மார்ப ணைந்தே
குறைவறுக்குஞ் செழுந்தமிழில் தோதில்லாச்
சொற்புனைந்து
கொழுமரைவை குழைத்துப் பூசி
மறைவிலுறு பரம்பொருளை மனத்திலுறு நறும்பொருளாய்
மருட்கையின்றிப் பிள்ளைத்தமிழில்
நிறைவுறுத்த வந்தஅருள் செல்லத்து ரைப்புலவன்
நீணிலமேல் நீடு வாழ்க! 1

எழுத்தெழுத வறியாதான் ஏடெழுதல் மட்டின்றி
யாப்பெழுதும் கலிகா லத்தே
பழுத்தொழுகும் தேன்தமிழில் பயனெழுக முட்டின்றிப்
பாவன்மை பயிலக் காட்டிக்
கொழுத்தன்பிற் சுரத்தெழுந்த கொண்முடியை ஏசுபிரான்
குழந்தைக்குப் பிள்ளைத் தமிழில்
வழுத்துவந்த புலவன்அருள் செல்லத்து ரையிந்த
வையத்து நீடு வாழ்க! 2

தனித்தமிழில் உரையெழுதுந் தகவில்லார் பலர்வாழும்
தறிகெட்டத் தமிழ்ஞா லத்தே
இனித்தொழுகுங் கொழுஞ் சொல்லால் நறவூறுஞ் செம்பொருளை
எழுதரிய ஓவ மாக்கிப்
பனித்தமிழில் வாய்குளிரப் பயிலுசெவி உளங்குளிரப்
பாடியவர் நரம்பு பொலியக்
குனித்துடலம் வணங்குமருள் செல்லத்து ரைப்புலவன்
குவலயத்து நீடு வாழ்க! 3

(வேறு)


மன்ற மாமயில் ஆடு பூந்துறை
மாலைமா மழை பொழிந்தபோல்
வென்ற தீந்தமிழ் ஆடி வியனிறை
வேந்தன் ஏசுபி ரான்எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/272&oldid=1447162" இலிருந்து மீள்விக்கப்பட்டது