பக்கம்:கனிச்சாறு 7.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  229


197

எழில்வாணனின் ‘ஒருசொட்டுக் கண்ணீர்’
நூலுக்கு அணிந்துரை!


ஏழை உழவனை, உண்மைஆ சானை,
எந்தமிழ்ப் பாவலன், ஈழத் தமிழனை,
கூழைப் படையோ டெல்லைகாப் பவனை,
குமுகத் தொண்டனை, அறஅதி காரியைக்,
கோழை யின்றி நாட்டுக் குழைக்கும்
குணத்தனைக், கலைஞனை, நல்லறி வோனைப்
பீழைப் படுக்கும் சூழலை விளக்கிப்
பெருமைப் பாக்களைக் கொண்டதிந் நூலே!

(வேறு)


‘தூவிய கடமையின் வாழ்வினை
அன்னவர் கொடுந்துன் பத்தை
மேவிய தூய்தமிழ்ப் பாக்களாய்
நம்மிடை மிளிர விட்டே
பாவலர் எழில்வாணன் ‘ஒருசொட்டுக்
கண்ணீ’ரை
ப் படையல் செய்தார்!
ஏவிய அவர்குரல் நமக்கும்கண்
ணீரினை இமிழ்க்கு மன்றோ?

விலைக்குப் பாடுவா ரிலர்,எழில்
வாணன்! வெம்பு நெஞ்சாய்
உலைக்குக் குத்திய அரிசியைப்
பிறர்க்கீந்து உமிச மைப்பார்
தலைக்குப் பதினேழு பாக்களைப்
பாடியே அவர்த விக்கும்
நிலைக்குக் கண்ணீரை நெகிழ்ந்துகுக்
காதவர் நிலத்திலுண்டோ?

அன்புத் தமிழுளம், அழகிய
தமிழ்நடை, அழன்றெ ழுந்த
என்பைத் தொளைக்கும் எரிசினம்,
இரக்கம், யாவும் கொண்டே
நன்பாத் தொடையலாய் நறும்பா
வலர் எழில்வாணன் செய்த
தென்பூட் டும்இந்த நூற்பயன்
என்று திகழ்க நன்றே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/274&oldid=1447166" இலிருந்து மீள்விக்கப்பட்டது