பக்கம்:கனிச்சாறு 7.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  233


நாம்வாழும் நிலக்கோளம், உலகம், வானம்,
ஞாயிறு, வெண் ணிலவு, விண் மீன்கள், மின்னல்,
தீம்புயல்சேர் நிலநடுக்கம், மழை, காற் று,உப்பு,
தேங்குநிலக் கரி, கல்நெய், இழுவை, ஆடி,
மேம்படு வெள் ளொளி, ஒலிகள், வால்மீன்,
மேலறுவான் வில்,என்னும் இயற்கூ றெல்லாம்
தேம்படுசெந் தமிழ்ப்பாவில் விளக்கிச் சொன்னார்,
திகழ்புலமை தமிழியக்கன்! வாழ்த்து கின்றேன்!

(வேறு)


தட்டாத யாப்பழகு! தளர்வில்லாப் பாவோட்டம்!
தமிழறிந்த புலவோர்க் கெல்லாம்
எட்டாத அறிவியலை எடுத்தளிக்கும் நல்விளக்கம்!
எந்தமிழில் பிறமொ ழிச்சொல்
முட்டாத தூயநடை! முனைமழுங்காச் சொல்வழக்கு!
முழுக்கருத்தும் கூறும் பாங்கு!
தெட்டாத தமிழ்த்தொண்டர் தமிழியக்கன் செயுந்தொண்டு
தேயாமல் திகழ்க! வாழ்க!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/278&oldid=1447172" இலிருந்து மீள்விக்கப்பட்டது