பக்கம்:கனிச்சாறு 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨எ


67. நாவலர் சோமசுந்தர பாரதியார் மறைவின்பொழுது பாடியவை.

68. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ‘குத்தூசி குருசாமி’ ‘குத்தூசி’ என்னும் ஒரு மாத இதழை 1962இல் தொடங்கினார். அவ்விதழ்க்கு விடுத்த வாழ்த்து இது. குத்தூசியில் வெளிவந்தது.

69. கடலூரில் ‘தென்மொழி’ அலுவலகம் இருக்கையில் இடையிடையே ஐயா அவர்கட்குத் துணையாய் இருந்துபின் அரசுப்பணியின் காரணமாய்த் தஞ்சைக்கு மாற்றலாகிப் போன ‘தேவராசு’ (பாவலர் இளஞ்சித்திரன்) அவர்கட்குப் பாவலரேறு அவர்கள் எழுதிய பாடல்.

70. இப் பாடலும் தேவராக (பாவலர் இளஞ்சித்திரன்) அவர்களுக்கு ஐயா பாவலரேறு அவர்கள் எழுதிய பாமடலே கோப்புப்படியின் தாளின் ஓரத்தில் ஏற்பட்ட நசிவால் பாடலின் சில அடிகளில் உள்ள இறுதிச் சொற்கள் தெளிவாகயில்லை.

தேவராசு அவர்களின் அன்புள்ளத்தையும், பாவலரேறு அவர்கள் அவர்மீது கொண்டிருந்த அன்பையும் பாடல் காட்டுகின்றது.

71. 1963-ஆம் ஆண்டு பாவாணர் பொருட்கொடைத் திட்டம் தென்மொழியில் அறிவிக்கப் பெற்றது. அதன்வழி அவர்க்கு மூவாயிரம் உருபாவுக்குமேல் நன்கொடை திரட்டி அனுப்பப் பெற்றது. அக்கால் விடுத்த வேண்டுகோள் இது.

72. பாவேந்தர் பாரதிதாசன் மறைவின்பொழுது பாடிய இரங்கற்பா.

73. பாரதிதாசனின் பா நலன்கள் குறித்த பாடல்கள் இவை.

74. புலவர் சிலர் தாம் இலக்கண அறிவில் மேம்பட்டவர் என்றும் அதனால் தாம் எழுதுவதே சரியென்றும், பிறர் எழுதுவதெல்லாம் பிழையென்றும் வீம்புக்குத் தம்பட்டம் அடித்துதிரிவர். உண்மையான மெய்த்தொண்டர்களை இவ்வாறு பழித்துத்திரிந்த இலக்கணப் புலவர் ஒருவரைக் கண்டித்து எழுதியது இது.

75. பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கைச் சிறப்புகள்.

76. இந்தி எதிர்ப்புக்காக எரிநெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மறைவுற்ற செந்தமிழ் மறவன் சின்னசாமியை வாழ்த்தியது.

77. அறிஞர் அண்ணா மறைவின் பொழுது பாடிய பத்துப் பாடல்கள்.

78. தமிழ்ச்சிட்டுகளுக்குப் பாவாணர் தாத்தாவை அறிமுகப்படுத்திய எளிமைப் பாடல்.

பாவாணர் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழ்க் கழகம் செழிப்புற்று வளர்ச்சியில் இருக்கையில் - சிறுவர்க்கும் பாவாணர் ஐயா அவர்களைக் கொள்கைவழி அறிமுகப் படுத்துகிறார் பாவலரேறு.

79. “சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக” பொன்விழா மலரில் 1970-ஆம் ஆண்டு எழுதிய கழக ஆற்றுப்படைப் பாடல். 

80. ‘ஆசிரியர் கூட்டணி’ என்னும் இதழில் வெளிவந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை வாழ்த்திப் பாடிய பாடல்.

81. தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாவாணர் தாத்தவை அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நரம்புக்கு நரம்பு உணர்வேற்றவும், உயிர் நாடிக்குநாடி தமிழ் ஊற்று பெருக்கவுமான பாவேந்தரை அறிமுகப்படுத்துகிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/28&oldid=1445497" இலிருந்து மீள்விக்கப்பட்டது