பக்கம்:கனிச்சாறு 7.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  241


‘செந்தமிழ்செய் யுட்கோவை’
எனும்அன்பு செழித்தஉயிர்
உந்துணர்வு மொய்த்திடவும்
உள்ளங்கள் இணைந்திடவும்
தந்தமிழ்து துளும்புமொரு
தகுகாதல் நூல்தந்தார்,
முந்துதமிழ்க் கோவைகளின்
முறைவைப்பிற் கேற்றிட வே!

பாக்களெல்லாம் பைந்தமிழ்த்தேன்!
பண்ணியைபு நலங்கொழிக்கும்! வயி
தேக்கியுள்ள கருத்தெல்லாம்
திகழ்நெஞ்சக் குலைமலர்த்தும்!
யாக்கையுளே உயிர்உலவல்
யாப்புடலுள் உணர்வுணர்த்தும்!
நோக்கிலுயர் அன்பூறும்
நுண்காதல் சிறந்திடவே!
(வேறு)
காதற் பெருமழை உயிர்நனைப்ப
கருத்துப் பெரும்புனல் உளம்பாய
கூதற் குளிரில் உடலணைந்து
குலவும் மயிலும் குலமகனும்
ஈதற் பேரறம் நிகழ்த்தியதை
எழில்வா ணன்-எனும் இயற்புலவன்
சாதற் கியலாச் செந்தமிழில்
சாற்றினான் கோவை போற்றிடவே!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/286&oldid=1447181" இலிருந்து மீள்விக்கப்பட்டது