பக்கம்:கனிச்சாறு 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௨

கனிச்சாறு ஏழாம் தொகுதி


124. முப்பத்தோராண்டுகளாய் வெளிவந்து கொண்டிருந்த ‘கவிதை’ இதழ் இடையில் நின்று வெளிவரும் நிலையில் அவ்விதழையும் அதன் ஆசிரியர் புலவர் தெசிணியையும் பாராட்டுகிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

125. தென்மொழியன்பர் சீரங்கராயன் தம்பியும், தமிழினமீட்சிப்படை வழக்கின்வழி ‘தடா’வில் இருந்தவருமான ஆறுமுகம் எனும் இளைஞர் தாம் தடாவில் இருக்கையில் பெருந்துணையாய்ச் செய்த பணிகளை நினைந்து மகிழ்ந்து பாவலரேறு ஐயா அவர்கள் எழுதிய பாடல்.

126. ‘தடா’க் கொடுஞ்சிறையில் ஐயா அடைக்கப் பட்டிருக்கையில், தம் பெயரன்களுள் ஒருவனான தெள்ளியனுக்கு (சொல்லாய்வறிஞர் அருளியார் - தேன்மொழியரின் இரண்டாம் மகன்) பாடலாய் எழுதிய மடல். சிறுவனோடு பழகும் குழந்தைமை உணர்வோடு எழுதியிருக்கிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

127. உமிழ்க்கின்ற அரசியலில் உரசாமல் அங்கும் இங்கும் ஊசலாடாமல், சிமிழ்க்கின்ற பார்வையிலே சீரழிக்கும் பகை நடுங்கச் செயல் கொண்ட அருமைத் தந்தை தம் (இரண்டாம்) மகள் தேன்மொழிக்கு ‘தடா’க் கொடுஞ்சிறையில் இருக்கையில் தம் கொள்கை வாழ்வின் வீறு என்றும் குன்றாது என்றுரைத்து எழுதிய பாமடல்.

128. ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பு வெளியிட்ட ஒலிப்பேழைக்கென்றும், ‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ இதழுக்கென்றும் பாவலரேறு ஐயா அவர்களின் அம்பேத்கர் பற்றிய இசைப்பாடல்.

129. தமிழ்மீது பற்று கொண்டும், ஐயாமீது நல்லன்பும் பற்றும் கொண்ட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் - தம் பெயரைத் தமிழ்ப்படுத்திக் கேட்டிடப் பாவலரேறு ஐயா அவர்கள் நடிகரின் அன்புள்ளங் கண்டு தமிழாகரன் எனப் பெயர்ச் சூட்டிப் பாடலாகவே எழுதிக் கொடுத்தது.

130. 1995ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கடும்காய்ச்சலில் இருந்த நம் ஐயா அவர்களைச் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை உள்ளுறை அலுவலர் திரு.மல்லிகேசன் அவர்கள் தம் பொறுப்பில் பண்டுவம் செய்து துணை இருந்ததற்கு மருத்துவமனையில் இருக்கையிலேயே கைக்குறிப்புச் சுவடியில் நன்றியுடன் ஐயா அவர்கள் எழுதிவைத்திருந்த பாடல் இது.

பொது ‘இ’ விழா - சிறப்புப் பாடல்கள்

131. அறுபது அகவைக் கிழவி, தன் பெயர்த்தியிடம் தான் கழித்த அறுபது பொங்கல் நாட்களைப் பற்றிக் கூறியது.

132. தென்மொழி தொடங்கப்பெற்று வந்த முதல் பொங்கலுக்குச் சிறப்பிதாழக வந்த இதழில் வெளியான பொங்கல் வாழ்த்துப் பாடல்.

133. பொங்கல் வாழ்த்துப் பாடல்.

134. பொங்கல் வாழ்த்துப் பாடல்.

135. தமிழர்தம் அறிவியல், மருந்தியல், விண்ணியல், அறிவு வளர்ந்தோங்க வாழ்த்துப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/33&oldid=1445502" இலிருந்து மீள்விக்கப்பட்டது