பக்கம்:கனிச்சாறு 7.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௩௩


136. 1962-இல் கடலூர் ஆண்கள் அடிப்படைப் பயிற்சிப் பள்ளி முத்தமிழ் விழாவிற்கு விடுத்த வாழ்த்து இது.

137. தென்மொழி இடைநின்று மீண்டும் வரத்தொடங்கிய பின் வந்த பொங்கல் காலத்தில் எழுதப்பெற்ற பாடல் இது.

138. தமிழ்க்குமுகத்தின் இழிநிலையில் பொங்கும் பொங்கல் என்கிறார் பாவலரேறு.

139. எதிரிகள் போர்ப்பண் இசைத்து நிற்க, தமிழா, பொங்கல் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறாயே! மரமா நீ? என்கிறார் பாவலரேறு.

140. வெங்காலூர்ப் பாவாணர் தமிழ் மன்றத்திற்கு நேரில் சென்ற பொழுது வாழ்த்தியது.

141. தமிழினம் எல்லா நிலைகளிலும் அடிமைப்பட்டிருக்கும் நிலையில், என்றைக்கு அந்த அடிமை நிலைகளெல்லாம் மாறுகிறதோ அன்றுதான் பொங்கல் திருநாள் என்கிறார் பாவலரேறு.

142. உண்மையான தன்னுணர்வு பெறாமல் தன்னுரிமையை எய்தாமல் எந்த விழாக்களிலும் ஈடுபடுவதில்லை மனம். இதைப்பற்றி நினையாதவர்களே விழா வேடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை மெய்ம்மைத் தமிழர் என்று சொல்லலாமா!


பொது ‘ஈ’ திருமணம், பிற வாழ்த்துப் பாடல்கள்

143. சு. மன்னர்மன்னன் – சாவித்திரி: பாவேந்தர் மகன் மன்னர்மன்னனின் திருமணத்திற்குப் பாவலரேறுவின் வாழ்த்து இது. 1954-இல் புதுச்சேரிக்கே வந்துவிட்ட நிலையில் பாவேந்தர் குடும்பத்துடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார் பாவலரேறு.

144. க. பழனியப்பன் – செயமணி :ஆசிரியரின் கல்லூரி நண்பர் க.பழனியப்பனின் திருமண வாழ்த்துப் பாடல் இது. ஆசிரியர் தலைமையேற்று நடத்திய முதல் திருமணம் இது.

145. வேங்கடேசன் – புட்பராணியம்மாள்: அன்பர் ஒருவர்க்குத் திருமண வாழ்த்துப் பாடல்.

146. உவே. பாலசுப்பிரமணியம் – துளசியம்மாள்: 1958 ஆம் ஆண்டிலேயே சீர்திருத்தக் காதல் கலப்புமணம் செய்துகொண்ட உ.வே.பாலசுப்பிரமணியன் - துளசியம்மாள் இணையருக்கு வாழ்த்துரைத்து விடுத்த பாடலிது.

147. மு. சாத்தையா – செயலெட்சுமி (தமிழ்க்குடிமகன் - வெற்றிச்செல்வி) :ஆசிரியரின் தென்மொழிக்குத் தொடக்கக் காலத்தில் உறுதுணையாக நின்ற தமிழ்க்குடிமகனார்க்குத் திருமண வாழ்த்துப் பாடல். ஆசிரியர் தலைமையில் நடந்த திருமணம். திருமணத்தில் மகபுகுவஞ்சி – நூல் வெளியிடப் பெற்றது.

148. இராசு – செயா: ஐயாவின் நண்பர் இராசுவுக்கும் - செயாவுக்கும் பின்நாளில் திருமணம் கைகூடும் என்று முன்பே கூறியிருந்தபடி 1960 இல் அவர்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்பில்லாத நிலையில் எழுதிவிடுத்த வாழ்த்துப்பா.

149. மாரி. அறவாழி – தாயம்மை : சிறுகதை எழுத்தாளர் திரு. மாரி அறவாழி அவர்களுக்கும் ஆசிரியரின் தங்கை தாயம்மை (சானகி)க்கும் நடந்த திருமணத்தின்பொழுது வாழ்த்தாக வெளியிட்ட சிறு நூல் இது. சில திருத்தங்களுடன் வெளியிடப் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/34&oldid=1445504" இலிருந்து மீள்விக்கப்பட்டது