பக்கம்:கனிச்சாறு 7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௩ரு


(அவரின் மணிவிழா 2009-ஆம் ஆண்டு நடந்த பொழுது பாவலரேறு ஐயா அவர்களின் திருக்குறள் மெய்ப்பொருளுரைச் சுருக்கத்தையும் வெளியிட்டார்) அவரின் திருமணத்திற்கு ஐயா அவர்களின் வாழ்த்து.

160. முத்துப்பாண்டியன் – மலர்விழி: பாவலர் முத்துப்பாண்டியன் திருமணத்திற்குப் பாவலரேறுவின் வாழ்த்துப்பாடல்.

161. ஈரோடு பெரு. தமிழ்வேந்தன் – பூங்கொடி: பாவலர் ஈரோடு பெரு.தமிழ்வேந்தன் திருமணத்திற்கு பாவலரேறுவின் வாழ்த்து.

162 பேராசிரியர் ஆறு. அழகப்பனாரின் மகள் காவிரியின் திருமணத்திற்குப் – பாவலரேறுவின் வாழ்த்துப்பா.

163. இராணி – சந்திரன்: பாவலரேறு தலைமையில் நடைபெற்ற பெரியார் தொண்டர் சத்திமோகன் மகள் இராணி– சந்திரன் திருமணத்திற்கு ஐயாவின் வாழ்த்து.

164. அறிவுச்செல்வன் - கல்யாணி: திருமணத்திற்குப் பாவலரேறுவின் வாழ்த்து.

பொது ‘உ’ நூல்கள் அணிந்துரை

165. ஐயா தம் 15-ஆம் அகவையில் எழுதிய பாவியமே மல்லிகை. அதை ஒரு சுவடியில் தாமே அட்டைப்படம் வரைந்து அழகாக வடிவமைத்திருந்தார்கள். தொடக்கத்தில் மல்லிகையை இதழாகக் கொண்டு வர எண்ணியவர் அதற்கெனச் சுவடியில் எழுதியிருந்த மதிப்புரைப் பாடலே இது. பழமை காரணமாக எழுத்து மங்கிப் போனதில் சில எழுத்துகள் தெளிவில்லாமல் இருப்பதால் விடுபட்ட பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

166. பதின்மூன்றாம் அகவை தொட்டு ஐயா தாம் எழுதிய தனிப்பாடல்களைத் தம் பதினைந்தாம் அகவையில் தாமே தொகுத்துக் ‘கனிச்சாறு’ எனும் பெயரில் கையெழுத்துப்படியாக வடிவமைத்திருக்கிறார். அக் ‘கனிச்சாறு’ தொகுப்பைப் பாவேந்தருக்குப் படையல் செய்து எழுதப் பெற்றதே இப்பாடல். தொடக்கக் காலத்திலேயே பாவேந்தர்மீது அவர்க்கிருந்த பேரன்பு இதில் வெளிப்படுகிறது.

167. கொய்யாக்கனி நூலுக்குப் படையல்! தம் முதல் நூல் ‘கொய்யாக்கனியை’த் தம் ஆசான் பாவாணர் ஐயா அவர்களுக்குப் படையல் செய்திருக்கிறார் பாவலரேறு.

168. ‘தென்மொழி’ இதழின் முகப்புப் பாடல்!

169. தென்மொழி முதல் தொகுப்பிற்கு முன்னுரை! தென்மொழியின் முதல் ஆண்டுத் தொகுப்பு கட்டம் செய்யப்பெற்று ஒரு தொகுப்பு நூலாக வெளியிடப் பெற்றது. பாவலரேறு. அதற்களித்த முன்னுரை இது!

170. பாவியக் கொத்து நூலுக்குப் படையல்! தம்முடைய ‘பாவியக்கொத்து’ நூலினைத் தம் பெற்றோர்க்குப் படையலாக்கியிருக்கிறார் பாவலரேறு.

171. தென்மொழியில் வெளிவரும் நூல்நிறை – பகுதிக்குரிய முன்னுரையாக இப்பாடல் எழுதப்பெற்றது.

172. ‘தமிழ்ச்சிட்டு’ இதழின் முகப்புப் பாடல்!

173. ‘மறைந்துவரும் தமிழ்ச் சொற்கள்’ பகுதிக்கு முன்னுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/36&oldid=1445997" இலிருந்து மீள்விக்கப்பட்டது