பக்கம்:கனிச்சாறு 7.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௬

கனிச்சாறு ஏழாம் தொகுதி


174. தென்மொழியில் வெளிவரும் பாவலர்கள் பலரின் பாடல்களை கொண்ட பாட்டரங்கப் பகுதிக்குரிய முன்னுரைப்பாடல் இது.

175. பேராசிரியர் சி.இலக்குவனார் நடத்திய ‘குறள்நெறி’ என்னும் இதழை, அவர் மகன் இமறைமலை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். அவ்விதழ்க்கு விடுத்த வாழ்த்து இது.

176. இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் பத்தவத்சலத்தின் இந்தி(ய) வெறிப் போக்கையும், தமிழ்ப்பகை உணர்வையும் கண்டித்து ஆசிரியவுரை எழுதியதற்காகத் தண்டிக்கப்பட்டு இரண்டுமாதம் சிறையிலிருந்தார் பாவலரேறு ஐயா. வேலூர்ச் சிறையிலிருந்த அக்காலத்தில் பாவலரேறு ஐயாவால் படைக்கப்பெற்ற பாவியமே ‘ஐயை’, அந்த ஐயை நூலைத் தம் துணைவியார் தாமரையம்மைக்குப் படையல் செய்தார் பாவலரேறு.

177. மாந்த வாழ்வின் உணர்வுச் சுவைகளை அழகுற விளக்கும் பண்சுவைப் பாவியமான ‘எண்சுவை எண்பது’ நூலைப் பாவேந்தருக்குப் படையலாக்கி இருக்கிறார் பாவலரேறு.

178. பேரா.தமிழ்க்குடிமகன் தொடங்கிய ‘அறிவு’ இதழுக்கு அளித்த வாழ்த்து இது.

179. பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரைக்குத் தந்த சிறப்புப் பாயிரம் இது. நூல் அச்சாகி வெளிவந்த பின்னர் எழுதியதால் நூலினுள் சேர்க்கப் பெறவில்லை. தென்மொழியில் வெளிவந்தது.

180. பாவலரேறு ஐயா அவர்களின் அக்காள் திரு. இராசம்மாள் ஐயா அவர்கள்மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். நேர்ச்சியால் அவர் மறைவுறவே, அவருக்குக் ‘கற்பனை ஊற்று’ நூலைப் படையலாக்கியிருக்கிறார் பாவலரேறு.

181. திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் நடத்தி வந்த புலவர் சரவணத் தமிழன் அவர்களின் தமிழ் இலக்கணக் காப்பு நூலான ‘தமிழ் நூலு’க்கு பாவலரேறு அவர்களின் பாயிரம்.

182 புலவர் இறைக்குருவனார் அவர்கள் மதுரையில் இருந்தபோது ‘வலம்புரி’ என்னும் இதழை நடத்தினார். அதற்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தபோது ‘பாவை’ எனும் இதழை நடத்திய பட்டறிவுள்ளவர். அவ்வகையில் இதழ் நடத்த முனைந்த புலவர் அவர்களின் ‘வலம்புரி’ இதழுக்குப் பாவலரேறு அளித்த வாழ்த்துப்பா இது.

183. பாவலரேறு ஐயாவைச் சிறப்பாசிரியராகக் கொண்டு திரு.க.வெ.நெடுஞ்சேரலாதன் சனவரி 1973-இல் மதுரையின்று தொடங்கிய ‘தீச்சுடர்’ எனும் திங்களிதழ்க்குத் தந்த வாழ்த்துப்பா.

184. பாவலர் செங்கை அழகன் அவர்களின் ‘ஆயிரம் மலர்கள்’ நூலுக்குப் பாவலரேறு அளித்த அருமையான ஊக்கப் பாடல்.

185. ஓவியப் பாவலர் வலவன் தொடங்கிய வண்ண ச்சிறகு என்னும் இதழ் முதல் முறை நின்று. இரண்டாம் முறை தொடர்ந்தது. அதற்கு விடுத்த வாழ்த்து இது.

186. புதுவை தமிழமல்லன் அவர்களின் நூலாகிய ‘தனித்தமிழ்’க்குப் பாவலரேறு தந்த அணிந்துரை.

187. தென்மொழிக்குத் தூணாக இருந்து சிங்கையில் செயல்பட்ட பாவலர் முல்லைவாணன் அவர்களின் குழந்தைப்பாடல் தொகுதிக்கு ஐயா அவர்கள் எழுதிய மதிப்புரைப்பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/37&oldid=1445998" இலிருந்து மீள்விக்கப்பட்டது