பக்கம்:கனிச்சாறு 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4  கனிச்சாறு – ஏழாம் தொகுதி


2

‘கவி’ தோன்றாதென்‌ புலமை மண்‌!


“‘கல்‌’லென்‌ றெடுத்து,நீ ‘மண்‌’ணென்று முடி” யென்று
கழறினான்‌ என்னை நண்பன்‌.
‘கவி’காள மேகமோ கம்பனோ வில்லியோ
கபிலனோ யாருமில்லாப்‌
புல்லனைக்‌ கேட்டானே’ என்றெண்ணி மிகவருந்தி
புதுக்‌ ‘கவி’யைப்‌ புனைய ஏதும்‌
புலமின்றி நின்று நீள்‌ பொழுதைத்‌ கழித்து வரப்‌
புலப்படா நின்றிருந்‌ தே
தொல்லை யிது எனமுடிவு கண்டவனாய்‌ ‘வார்த்தை’களில்‌
தொலை சென்று நின்று கண்டேன்‌;
தொன்தமிழைக்‌ கற்பதோ கடினமதைக்‌ கற்றுப்பின்‌
தோய்வதோ சொல்ல வொண்ணாத்‌
தொல்லையென எண்ணியெந்‌ தலை தொங்க நாணிப்பின்‌
தோய்கால்க ளெடுத்த வோட்டம்‌
தொலைசென்று எண்ணினேன்‌ ‘கவி’யொன்றென்‌ னுள்ளத்தில்‌
தோன்றாத என்‌ புலமை மண்‌.”

-1949 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/49&oldid=1446010" இலிருந்து மீள்விக்கப்பட்டது