பக்கம்:கனிச்சாறு 7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

ஒல்லியிடைப் பெண்டிரெலா மோடோடிப் பாயும்
ஓங்கிவளர் பசுங்கொடியில் பூத்து மணம் வீசும்,
மல்லிகையின் மணம்நுகரின் இன்பமெலாந் தோன்றும்;
மறுத்தல் முடி யாதென்றார் ஒருசிலபேர்! அங்கும்
இல்லையெனக் கின்பமதை யாரிடஞ் சொன்னாலும்
ஏதுமிலாப் பேதையென்றும் உணர்வில்லான் என்றும்
சொல்லியெனை யிகழ்ந்தவர்கள் கணக்கில்லை - ஆயின்
சொல்லிவிளக் கிடுவார்கள் இதுவரையில் காணேன்.

உழவரையான் கேட்டேன் “செல் நெல்" லின்ப மென்றார்.
உழைப்போரைக் கேட்கஅவர் "ஓய்வு”தனைச் சொன்னார்.
"குழவி”யின்பம் என்றுசில கோதையர் சொன் னார்கள்.
"குறிஞ்சித்தேன்” என்றுசில குறவர் மொழிந் தார்கள்
மழவர்தமை வினவ, அவர் 'போர்' என்றே ஆர்த்தார்!"
மதப்பித்தர் தமைவிளிக்கப் பிறைமுடியோன் தன்னின்
கழலின்பம் என்றார்கள்! “கன" வென்றார் புலவர்!
கருத்தொன்றும் பயனில்லை;
வெறுத்தொதுக்கி விட்டேன்.

வருவிருந்தை பரவுவதில் இன்பம்மிக வென்றார்;
வருவோர்க்கு இலையென்னா திலைவிரித்துப் போட்டேன்.
ஒருதுளியும் இன்பமிலை எங்கெங்குச் சென்றும்!
"ஓடிப்பார்" மலையுச்சி மீதிருந்தே உலகை,
பெருகின்பம் தேன்றுமென ஒருவர்சொல ஓடி,
பெருமலையில் மீதிருந்து கீழ்க்கண்டோ அச்சம்
பருகிவந்தேன், அல்லால் நான் இன்பத்தைக் காணேன்.
பார்க்குமிடம் எங்குமெனக் கின்பமிலாப் பாலை!

குளிரொளியால் எனைத்தழுவி யின்ப மளிக்கின்ற
கோலமதி! உன்ளொளியால் மகிழ்கின்றேன் என்றால்,
வளரன்பால் என்னுயிரை வளர்க்கின்ற அன்பர்,
வாழ்கின்றார்; அவருடன்யான் நட்புக்கொள் கின்றேன்!
தளிரின்பம் துளிர்விட்டு வளர்கின்ற வாறு
தன்னுணர்வால் பூரித்து மகிழ்கின்றேன் அடடா!
நெளிகின்ற பொருளிளெல்லாம் இன்பத்தைக் காணும்
நெறி யென்ன நெறியென்றால் அவரினிய நட்பே!

-1950
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/51&oldid=1441916" இலிருந்து மீள்விக்கப்பட்டது