பக்கம்:கனிச்சாறு 7.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  45

நாள்முழுவதும் பேசினேன்;
நள்ளிரவு சேரும்வரை
மணலில் உருண்டேன்!
கண்பதிந்த காட்சியெல்லாம்
கால்பதிய வாழ்ந்தவன்!
காலம்வந்து தேய்த்தழித்தும்
கற்பனையில் ஆழ்ந்தவன்!

-1975




32

ஒரு மனம்!



பொறாமையால் ஒருமனம் புழுங்கிச் செத்தது!
இராமை யாலும் இருக்கின்ற மையாலும்
எழுந்தெழுந் தமர்ந்து விழுந்து கொண் டிருந்தது!
உழுந்தளவு கருத்தும் உரலளவு எரிச்சலும்
கலந்து கலந்து எங்கும் கதைத்துக் கொண் டிருந்தது!
புலந்துள நெஞ்சம் புகைவான் சூழ்ந்தது!
மக்கள் அதற்க்கு மரங்களாய்ப் பட்டனர்!
சிக்கலே உளத்தில் சிணுக்குவிழுந் திருந்தது!

வருவோர் போவோர் எல்லா ரிடமும்,
தெருவோ ரத்தின் சிறுசிறு பிள்ளைகள் 10
குட்டான் குட்டானாய்க் கொள்ளைக்குப் போதல்போல்
முட்டி முட்டி முடியாமல், பலமுறை
கழிச்சல் கண்டவன் கால்மேல் எல்லாம்
இழுப்பிக் கொண்டே எழுவது போல,
எழுதி எழுதி மனவளம் இளைத்தது!
புழுதியில் புரண்டு, புழுக்கையில் உருண்டு,
தூவலைச் சேற்றிலே துவைத்துத் துவைத்து
வெள்ளை யேறாமல் வெளுத்துக் கட்டியது!
நொள்ளையர் சிற்சிலர் கொள்ளை என்றே
தம்பல வாயர் தின்பது போல 20
அம்பலில் எல்லாம் அதக்கிக் காட்டினர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/90&oldid=1446066" இலிருந்து மீள்விக்கப்பட்டது