பக்கம்:கனிச்சாறு 7.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


37

வெதுவளாத வாழ்வு, என் வாழ்வு!


அன்பிலே மழைத்தண்ணீர்!
அறிவிலே பெருநெருப்பு!
ஆற்றலில் சூறைக் காற்று! - உளத்
தென்பில் மாமலை!
தெளிவிலே நீர்நிலை!
திரிதலில் வானப் பறவை!
என்பிலே நல்லுறுதி!
இயல்பிலே தமிழுணர்வு
எண்ணத்தில் தமிழர் மேன்மை! - வருந்
துன்பிலே துணிந்தமனம்
துயிலிலே விழித்த நிலை!
துவளாத வாழ்வென் வாழ்வே!

பட்டம் என் மூக்குப்பீ!
பதவியென் கால்தூசு!
பாராட்டென் காதுக்குறும்பீ - பெருந்
திட்டமுடன் இயங்குவேன்!
தீரமுடி வெய்துவேன்!
தேர்வதனை முனைந்து செய்வேன்!
வெட்டெனவே பேசுவேன்!
விளக்கமுற எழுதுவேன்!
வீணரை விலக்கிவைப்பேன்! - வரின்
கட்டாயம் பேசுவேன்;
கருத்தைப்பரி மாறுவேன்!
கடுகளவும் பகைகொள் ளேனே!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/97&oldid=1446089" இலிருந்து மீள்விக்கப்பட்டது