பக்கம்:கனியமுது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

பேரறிஞர் அண்ணா அவர்கள், புதுடெல்லி மாநிலங்கள் அவைக்கூட்டத்திற்காகச் சென்றபோது 1965 இறுதியில், ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தார்களாம். அந்தக்கதை இவர்களைக் கவர்ந்ததால், அதனை, அப்போது ‘காஞ்சி’ இதழில் தாம் கையாண்டு வந்த கவிதை நடையில் எழுதி வைத்திருந்தார்கள்.

ஊருக்கு வந்தபோது, நான் வழக்கம்போல் காணச் சென்றிருந்தேன். உடனே என்னிடம் அந்தத் தாள்களைத்தந்து, என்னைத் தம் அருகே அமரச்செய்து அந்தக்கதை முழுவதையும் சொல்லி, “இதை வைத்துக் கொண்டு, நீ உன்னுடைய செய்யுள் நடையில் எழுதிக் கொண்டுவா. ‘காஞ்சி’ மலரில் வெளியிடலாம்” என்றார்கள். அவ்வாறே நான் எழுதிக் ‘காஞ்சி’ மலரில் வெளிவந்தது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஓவியத்தையும், அதை வைத்து நான் எழுதியவற்றையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளேன்; ஒப்பிட்டு நோக்கிட அல்ல ! நம்மையெல்லாம் கண்ணீர்க்கடலில் தள்ளிவிட்டுத் தாம் மட்டும் கரையில் அமர்ந்து கொண்ட அண்ணனை நினைவு கூர !

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/102&oldid=1380092" இலிருந்து மீள்விக்கப்பட்டது