பக்கம்:கனியமுது.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது.pdf


ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
பாங்குடன் கண்டு, பரிந்துரைத்தார் நண்பர்.
விருப்போடு வேண்டியதால் சின்னாள் முன் சென்றேன்.
சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
நேர்ந்தது, மேனாட்டார் நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
தேர்ந்த சிறந்தகதை; சீராம் கருத்துக்கள்!

பெண்டிர் பலமணம் பெற்றிடும் கொள் கையங்கு
உண்டென்ப தால்அஃது உணர்த்துங் கதையெனினும்
வெற்று நகைச்சுவை வீணாம் எனக்கருதி,
மற்றொரு நற்கருத்தும் மாண்போடு தந்தனரே!

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/104&oldid=1380100" இருந்து மீள்விக்கப்பட்டது