பக்கம்:கனியமுது.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

அமெரிக்க நாட்டினில் செல்வம் மிகுதி
அதனைப் பெற்றிடும் அலைச்சலும் அதிகம்
ஈட்டிட முனைந்திடும் இயல்பினோ ராங்கு
இல்லற இன்பம் பெற்றிட வில்லை, என்பதைப்
பாங்குடன் அப்படம் காட்டு கின்றது.
மேலும் மேலும் செல்வம் சேர்த்திட
ஓயாதுருண்டு உழைத்திடும் அன்னார்
காதலின்பம் தனையும் இழந்துமே
கருவியாகிக்கிடக்கிறார் என்பதே பாடம்.

எத்தனைச் செல்வம் ஈட்டிக் குவிப்பினும்
மன துக்கோர் நல் மகிழ்ச்சி இல்லையேல்
எற்றுக்குப் பணம்! காகிதக் குவியல்!
மற்றவர் பார்த்து மதித்திட மட்டும்
மாநிதி சேர்த்திடல் மாபெரும் தவறு
என்பதை யெல்லாம் இயம்பிட வில்லை
காட்சிகள் காட்டிக் கருத்தளிக் கின்றார்.

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/105&oldid=1380111" இருந்து மீள்விக்கப்பட்டது