பக்கம்:கனியமுது.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

செல்வம் குவித்துந் திருப்தி யடையாமல்
பல்வகை யாற்பாடு பட்டிடுவர், எப்போதும்
மென்மேலுஞ் சேர்க்க விழையும் அமெரிக்கர்,
நன்முறையில் இல்வாழ்வை நாடி அனுபவியார்;
காதலெனும் பேரின்பங் காணா இயந்திரமாய்
மோதிடுவர், என்று மொழியுந் திரைப் படமாம்!

எத்தனையோ மாநிதியை ஈட்டித் திரட்டிடினும்
சித்தங் களிப்படையச் செய்யாது போமாகில்
எற்றுக்குச் செல்வம் ; எதிரி மதித்திடவோ?
வெற்றுத்தாள் தாமே, விளைவென்ன ? என்பதெல்லாம்
காட்சிகள் வாயிலாய்க் காட்டித் தெளிவுறுத்தும்
மாட்சிமை வாய்ந்த மகத்தான வாய்ப்பாம்!

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/106&oldid=1380116" இருந்து மீள்விக்கப்பட்டது