பக்கம்:கனியமுது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

ஓடைக்கருகினிலோர் பழங்கால வீடு
ஒய்யார ஒளியில்லை ஆடம்பரம் இல்லை
இஃதே இன்பமதை ஈந்திடும் இல்லமென
இருவரும் வாழ்ந்தனர் இணைபிரியா முறையில்
உள்ளதைக் கொண்டவர்கள் மகிழ்ந்திருக்கலுற்றார்
பேசிச் சிரித்தவர்கள் பேரின்பங் கண்டார்
வேலைகளை விருப்பமுடன் இருவரும் மேற்கொண்டார்
இல்லறமே நல்லறம் எனும் மொழிக் கேற்பத்தானே !

சொத்துசுகம் இல்லா நிலையினில் இவர்கள்
வாழ்க்கை நடத்தும் விதம் படமாக்கிடவே
வந்தனன் குறும்புமிகு வாலிபனுந்தானே
வனிதையைப் பெற்றிடமுதலில் முயற்சித்தவனே
அழுக்கேறிக் கிடந்ததுகாண் ஆடை
அலங்கோல நிலை அந்த இல்லம் ஆனாலும் அகமகிழ்வுடனே
அணங்கவளும் பம்பரமாய்ச் சுழன்றே
அடுக்களையில் வேலைபல செய்திடவே கண்டான்

அவள்கணவன் உடனிருந்து உதவிடவும் கண்டான்

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/111&oldid=1380155" இலிருந்து மீள்விக்கப்பட்டது