பக்கம்:கனியமுது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

வருக! விரைக! பெறுக! வருக! விரைக!
பெரும் கவர்ச்சிகொள் விதமதாக
இவ்வொலி எழுப்புகின்றான் இனிய முகத்தினன் ஆங்கு
எக்களிப் புடனேகூட்டம்; ஏகமாய் விற்பனை தான்!
பொங்கிடும் மகிழ்ச்சி ஆங்கு ததும்பக் கண்டாள்
பொருள் மிகுதியும் விரைந்து குவியக் கண்டாள்.
இவ்விதம் கடைநடத்தும் காளையையும் கண்டாள்
அன்னவன் யாரோ என்னில், மணாளன் ! ஆமாம்!
திகைத்தனள் மாது ஓர் கணம் தீ மிதித்தாற்போல்
சிரித்தனள் அவன் நிலையைக் கண்டு மறுகணம்
கண்டனன் காதலின்ப வல்லியைத் தான்
கடைதனில் இருந்தவாறே புன்னகை உதிர்த்தான்
நெருங்கியே வந்த நேரிழையாளிடமே
நேரம் அதிகம் செலவிட முடியா நிலையில்
சென்று செப்பினன் சிந்தையில் மகிழ்ச்சி பொங்க ;
புதுமுறை வாணிபத்தால் பொருள் குவியுதென்று!
வளர்ந்தது! வளர்ந்தது! விந்தை வாணிபம் !!

குவிந்தது! குவிந்தது! மாபெரு நிதி !!

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/115&oldid=1380194" இலிருந்து மீள்விக்கப்பட்டது