பக்கம்:கனியமுது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

ஆங்கொருவன் கூவும் அமுதக் குரல் கேட்டாள் :-
“வாங்கிடவே வாரிரோ, வண்ணப் பொருட்களையே?
இப்பெரிய வாய்ப்பினிமேல் எப்போதும் கிட்டாது!
தப்பினால் மிக்க தவறாகும், செப்பிடுவேன்!”

கேட்டார்ப் பிணிக்குங் குரல் கேட்டு, மக்களின்
கூட்டம் விரைந்து குவித்தது வாணிபத்தை!
மங்கை திகைத்து மயங்கி விழுமுன்னர்—
தன்கணவன் தான் வணிகன் என்ப துணர்ந்தாளே !
தன்னையவன் நோக்கித் தலைகுனிந்த ஓர்கணத்தில்
புன்னகை பூத்துப் புகுந்திட்டான் வாணிபத்தில் !
ஏக்கம் பெருகிடவே ஏந்திழையாள் தானெருங்கி
நோக்கினாள்; “நேரம் நொடிப்பொழுதும் வீணாக்கேன்!
பார்த்தனையா, மாமலைபோல் பண்டம் குவிகிறதை?
தீர்த்திடுவேன் நம்வறுமை; செல்க நீ நிம்மதியாய் !”
என்றான், முழுகினான் ஈடற்ற வாணிபத்தில் !

ஒன்றல்ல பற்பலவாய் ஓங்கியதே பல்கி,

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/116&oldid=1380204" இலிருந்து மீள்விக்கப்பட்டது