பக்கம்:கனியமுது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

பூந்தோட்டம்! புதுப்பொலிவு ! பொன் ! மணி!
எல்லாம் இருந்தது அவன் மட்டும் அங்கில்லை,
இவளிங்கு ஏங்குகிறாள் பழைமை தனைஎண்ணி
அவன் அங்கு அலைகின்றான் பொருள் குவித்து!
இவளைச் சுற்றிலும் ஓர்பாலை, வெப்பம் மிகுதி
அவனைச்சுற்றிலும் பெருஞ்செல்வம், பெருகு செல்வம்
ஓயாமல் உடை வழக்கின்றான் வேறு நினைப்பற்று
போர் போராய்க் குவிந்திடுது பணமூட்டை
கண்டதால் வெறி மேலும் கொண்டிட்டான்
காளையவன் பணந்தேடும் பாடதிலே மாள்கின்றான்!
கைம்பெண்ணாகிவிட்டாள் கருப்புடை யணிந்தாள்
காதல் உலகினில் வாழ்ந்து வந்த எம்மைக்
காசு தேடிடும் வெறி பாழாக்கிற் றந்தோ !
இல்லறத்தில் எளிமையுடன் இருந்து வந்தேன்.
என்னை மறந்தும் அவர்பொருள் பித்துக்கொண்டு
ஓயாதுழைத்து ஒரு துளியும் பயன்பெறாது
உயிர்நீத்தாரே அந்தோ! உலகை அறிந்திடுவாய்

பணத்தாவே சுவையில்லை பாழாக்குது வாழ்வை

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/119&oldid=1380230" இலிருந்து மீள்விக்கப்பட்டது