பக்கம்:கனியமுது.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

பூந்தோட்டம், மாடு,மனை, பொன், மணிகள், புத்தாடை
நீந்தியெழும் செல்வ நிலைக்களனாய் ஆள் அம்பும்—
எங்கும் பளபளப்பும், ஏற்ற மிகுவாழ்வும்,
தங்கியிவை தான் துய்க்கத் தக்கதாய் ஓய்வில்லை!
பின்னும் பொருள்குவிக்கப் பித்தாய் அலைகின்றான்!
பொன்னாள் தனியாய்ப் பொசுங்குகிறாள் வெம்மையினால்
ஓடுகின்றான்; போர் போராய் ஓங்கியெழும் செல்வத்தைத்
தேடுகின்றான்; அவ்வழியில் தேய்ந்து மடிந்தானே!!

காதலித்து வாழவந்தாள் கைம்பெண்ணாய் மாறியே
தீதளிக்கும் செல்வத் திரளையே மேல்சுமந்து,
“விந்தை மிகுபணமே, வீணாய் உனைத்தேட
அந்தோ! என் அன்பர் அரிய உயிர் நீத்தாரே!”
விம்மினாள்; எண்ணியே வெய்துயிர்த்தாள்; பாழானாள் !

அம்மவோ; ஆரணங்கு கைம்மைக் கருப்புடையில்

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/120&oldid=1380237" இலிருந்து மீள்விக்கப்பட்டது