பக்கம்:கனியமுது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

எத்தனை இன்பமுடன் இருந்துவந்தோம் முன்னம்
செல்வத்தைத் தேடாமல் செந்தேன் உண்டு மகிழ்ந்தோம்
பணம் தேடும் ஆவலது பாம்பாகியும் வந்து
பண்பாளன் என்கணவன் உயிர்குடித்திட்டதந்தோ !
பொருளிருக்குது எனக்காக மலைபோல—
புன்னகைதான் இல்லை! புருடனவன் இல்லை!
மாளிகை இங்குளது மயக்கு பொருளுடனே
மன்னவன் இங்கில்லை; எனக்காவி இல்லை !
இந்த விதமெல்லாம் எண்ணமிட்ட பெண்ணாள்
பாடிக் காட்டிடவில்லை அவள் மனத்தின் நிலையை!
பார்வை! பெருமூச்சு ! திகைப்பு இதனாலே
பார்ப்போர்க்கு உணர்த்திவிட்டாள் இப்பாடந்தனையே!
எங்கேனும் நெடுந்தொலைவு சென்றிடவே வேண்டும்
ஏகாந்த நிலை பெற்று இருந்திடவும் வேண்டும்
இங்கிருந்து முன்னாளை எண்ணியெண்ணி விம்மி
இருந்திடுதல் இறத்தலினுங்கொடிதாகும் அம்மா!
இந்தவிதம் எண்ணி அவள் புறப்பட்டாள்காண்

‘வானரதம்’ ஏறி நெடுந்தொலைவு செல்ல —

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/121&oldid=1380248" இலிருந்து மீள்விக்கப்பட்டது