பக்கம்:கனியமுது.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

கண்ணாளன் இன்னுயிரைக் கவ்வுங் கடும்பாம்பாம்
மண்ணாகும் செல்வத்தை வைதாள், சபித்திட்டாள் ;
கொட்டிக் கிடக்கின்ற கோடுயர்ந்த மாமலைபோல்
கிட்டியுள்ள செல்வத்தால், கெட்டுவிட்ட இல்வாழ்வும்
மன்னவனும் மீண்டும் வரவகையும் இல்லையன்றோ?
என்னே, என் ஆவலெலாம் ஏகியதே; ஆவியில்லாக்
கூடாகி ஏன் நான் இக்கோடிபொருள் தானடைந்தேன்
வாடா மணவாழ்வு வாய்ப்பதற்கு யாது செய்வேன்?

என்பதெல்லாம் வாய்விட் டியம்பவில்லை; நெஞ்சத்துத்
துன்பமெல்லாம் ஒண்முகத்தில் தோய உணர்த்திட்டாள்
இங்கே இனி மேலும் தங்கினால் முன் நினைவால்
சங்கடங்கள் மேவிவரும்; சாவே சிறப்பென்னும்
எண்ணம் மிகும்; எனவே ஏக்கம் மறைப்பதற்கு—
விண்ணூர்தி ஏறி வெளியூர் புறப்பட்டாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/122&oldid=1380253" இலிருந்து மீள்விக்கப்பட்டது