பக்கம்:கனியமுது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


அடுத்துவந்த மழைக்காலம் கொடிதாம், அந்தோ!
ஆங்காரப் புயற்காற்றின் சீற்றம் வேறு!
கெடுத்ததவர் குடியை, அந்தக் கிழவி மாண்டாள்!
கீழ்வீழ்ந்த சுவர்க்கிடையே மகன் பிறந்தான்!
அடுத்தவீட்டுக் கந்தப்பன் உதவா விட்டால்,
அவள் நிலைதான் பாழாகும்! கணவ னுக்கு
விடுத்திட்ட மடல்களுக்கும் பதிலே யில்லை!
விம்மி விம்மி வறுமையினால் உடைமை விற்றாள்!


கடல்கடந்தோன் மனைவிமகன் தாய்ம றந்து,
கண்மூக்குச் சிறுத்திட்ட சீனாக் காரி
இடம் மயங்கிக் கிடந்திட்டான்! எதுசெய் தாலும்
யார் கேட்பார்? ஆண்மகனின் உரிமை யன்றோ?
உடல்முழுதும் போர்வைக்குள் மறைத்த வாறே
உறங்குவதை விரும்புகின்ற பனிவீழ் காலம்-
உடல் நலிவால் இடருற்ற நீலா வுக்கே

ஓடோடிக் கந்தப்பன் துணைபு ரிந்தான்!

2

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/13&oldid=1459278" இலிருந்து மீள்விக்கப்பட்டது