பக்கம்:கனியமுது.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

இந்தவிதம் விந்தைமிகு கலையினிலே ஈடுபட்டுக்
கருவிகளே அமைத்தவனும் கலையினைப் பெருக்கி வர—
கருவிகளுக்கிடையே சிக்கியே ஓர்நாள்
செத்துவிட்டான் ஓவியனும்; செல்வி விதவையானாள்!
ஓவியன் திரட்டிவைத்த பெருநிதியும்
ஒயிலிழந்து ஒடிந்த மனமுடைந்த பெண்ணுக்கே!
கருப்புடையில் அவளைக் கண்ட கல்மனமும் உருகும்
களிப்பான வாழ்வுதேடி அலைந்தவளின் கதியைக் காணீர்

சின்னாட்களுக்குப் பிறகு சித்தச் சோர்வுடனே
சிற்றுண்டிக் கடையொன்றில் சென்றவள் இருக்கையிலே
கோமாளி கூத்தாடிக் குபீர் சிரிப்பெழுப்பி
ஆங்கொருவன் ஆடியுமே அகமகிழ வைத்திட்டான்.
ஊதியம் அதிகமில்லை; உயர்ந்த நிலையுமில்லை
எப்படியோ சிரிப்புமூட்டி வாழவழி கண்டிட்டான்
இவனுடனே வாழ்ந்திட்டால் இடர் ஏதும் ஏற்படாது

என்றெண்ணி அன்னவளும் அவனை மணந்தாளே!

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/133&oldid=1380301" இலிருந்து மீள்விக்கப்பட்டது