பக்கம்:கனியமுது.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


கண்டு பிடித்த கருவியே காலனாய்
உண்டதே ஆவி; உடன்விதவை ஆயினளே!
ஓவியன் ஈட்டிவைத்த ஒப்பரிய பொற்காசும்
பாவியவள் மாநிதிபின் பண்டாரஞ் சேர்ந்தனவே!
கல்நெஞ் சுருகும் கறுப்புடையிற் கண்டவர்க்கே;
உள்நெகிழும் உல்லாச வல்லி உயிர்வாதை!
சோர்ந்தடங்குஞ் சித்தத்தின் தொய்வு நிறைவதற்குள்
தீர்ந்தது. சின்னாளே! சீமாட்டி ஓர்தினத்தில்
சிற்றுண்டி மாளிகை சென்றாள் அமர்ந்திருந்தாள்.
உற்றவர் உள்ளம் உவகைக் களிகொள்ள
ஆடினான் கோமாளி ஆங்கொருவன்; எக்களிப்பால்
பாடினான்; யாவரும் பல்தெரியத் தாம் சிரித்தார்!
"ஏழையாய் உள்ளான்; எனக்கும் நகைப்பூட்டி
வாழவழி காட்டுவான் வாராது துன்பமெனக்
கண்மணி நான்காம் கணவனாய்க் கல்யாணம்
பண்ணீனாள், நல்ல பயனடைவோம் என்றெண்ணி!

123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/134&oldid=1380205" இருந்து மீள்விக்கப்பட்டது