பக்கம்:கனியமுது.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

சிற்றுண்டிக் கடையினிலே வருவோர்கள்
மனமகிழ வேடமிட்டுப் பலவேடிக்கைதான் காட்டிக்
கிடைத்ததைக் கொண்டவனும் கிள்ளை ஆவலுடனே
தொல்லை தாக்காத வாழ்வினைப் பெற்றிருந்தாள்.

படமெடுக்கும் கூட்டத்தார் கண்களிலே பட்டுவிட்டான்
பட்டம் ஏதும் பெறாது பகட்டு துளியும் இராது
கோமாளி ஆட்டமதைக் குடம்பிக்காகக் கொண்ட
நடிகனவன் ! நாடி அவள் பெற்றிட்ட நாயகன்
அவ்வளவே! அந்தரத்தினிலே அவனை ஏற்றி வைத்திட்ட
அவன் நடிப்பு! அவன் அழகு! அவனிமெச்ச உயர்ந்தது காண
அரண்மனையோ என்றெவரும் வியந்திடும் வீடுபெற்று
அடிவருடப் பல்லோர்கள், ஆடம்பரம் அமோகம்!

அவளிருக்கும் நிலையினையும் அவன்காண நேரமில்லை
ஓயாமல் படப்பிடிப்பு! ஒய்யார மிகுவாழ்வு
சிரித்துப் பேசிடவோ நேரமில்லை அவனுக்குச்
சேல்விழியாள் கண்டுகொண்டாள் செந்தேன் வந்ததென

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/135&oldid=1380282" இருந்து மீள்விக்கப்பட்டது