பக்கம்:கனியமுது.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

வேடம் பலபூண்டு வேடிக்கை காட்டிடுவான், ஆடம் பரமில்லை, ஆர்ப்பரிப்பு தானுமில்லை, தொல்லேயில்லை; தாயோன் துளியும் பணத்தாசை இல்லேயில்லை; என்றும் எனப்பிரியான் போதுமே! கிட்டிவந்த சொற்பத்தில் கிள்ளே மகிழ்வுடனே எட்டிவிட்டோம் இன் பத்தின் எல்லை என இருந்தாள். பேரிடி தாக்கியது பேதைப் பசுமரத்தில் 1 ஆரிடம் கூவி அரற்றுவாள் இந்நிலையை 2 கும்பி கழுவமட்டும் கோமாளி வேடத்தை கம்பியிருந்த அவள் நாயகனைச் சூழ்ந்துகொண்டார். 'என்னே உனதழகுக் கெங்கள் திரைப்படத்தில் முன்னேற்றங் காண முயல்வோம்; விரைவாக உச்சிக்குச் செல்வாய் உயர்வாய்!” எனக்கூறி மெச்சினர். இச்சையுற்ருன் மேல்நிலைக்கும் சென்றிட்டான். மன்னன் அரண்மனைபோல் மாளிகை, வாகனம், பின்னே அடிவருடப், பேச்சைச் செயலாக்கப் பல்லோர் நிறைந்திட்டார் பம்பரமாய்ச் சுற்றியே

அல்லும் பகலும் அயராப் படப்பிடிப்பாம்!

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/136&oldid=692069" இருந்து மீள்விக்கப்பட்டது