பக்கம்:கனியமுது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


ஓய்யாரம், உல்லாசம், உற்சாகம் உண்டெனினும்-
அய்யோ தன் அன்பிற் கரசியிடம் இன்பமாய்
வாய்ச்சொல்லும் பேச வகையில்லை; நேரமில்லை!
காய்ச்சிய நெய்யாகக் கண்ணாள் உருகுகின்றாள்!
பண்பட்ட வீரனைப் பாராட்டிப் போற்றிட
நண்பர்கள் கூட்டம் நடத்திய ஓர்விழாவில்-
பல்லாயிரம் பேர்கள் பார்த்த நெருக்கடியில்
கொல்லாமல் செத்தான்; குவளைக்கண் மோதியழ!
மீண்டும் கருப்புடையும், மீண்டுமந்தக் கண்ணீரும்!
மாண்டவன் செல்வம் வேண்டாது வந்ததால்
திட்டமொன்று தீட்டித் - திரளான தன்சொத்தைக்
கெட்டழிந்து போனவரின் கீழ்மை அகற்றுதற்கே
எண்ணி அரசாங்கம் ஏற்ற அலுவலர்பால்
நண்ணி அவள் திட்டம் நவின்றதுதான் தாமதம்....
அன்றவரும் அஞ்சி "அழைத்துச்செல் வைத்தியர்பால்!
சென்றிவளின் சித்தம் திடுமென்று பேதலித்த
செய்திசொல்!" என்றார்; சீமாட்டி அங்ஙனமே
எய்தி, மருத்துவர்க்கு யாவு ; விரித்துரைத்தாள்?

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/138&oldid=1380275" இலிருந்து மீள்விக்கப்பட்டது