பக்கம்:கனியமுது.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


பணியாள் ஒருவன் வந்திட்டான் இங்கு
பழைய ஆள் அவன்! பரிகாசம் செய்யப்
படமெடுக்க வந்தானே - அவனே தான்?
நிலைதாழ்ந்து வேலையாளானான் அவனும்.

அவனே இனி நமக்கு வாழ்வளிக்க வல்லான்
வாழ்ந்து கெட்டுவிட்டான் வலிவிழந்து விட்டான்
வாரிச் செல்வமதைக் குவித்திடவே மாட்டான்
வாழ்வு எளிமையுடன் இனிமை காண்போம் என்று
அவனைத் தன் கணவனாய் ஆக்கிக் கொண்டாள் மாது

இனிமையாய்ச் சென்றது சில ஆண்டு தாமும்
மக்கள் மூவர் பெற்று மகிழ்ந்திருந்தாள்.
மாளிகை வாசமில்லை ! மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை.


128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/139&oldid=1380195" இலிருந்து மீள்விக்கப்பட்டது