பக்கம்:கனியமுது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

வேர்விட்ட மரம்போல வீட்டி னுள்ளே
    வினைபுரிவாள் மனைவியெனத் தேடிப் பார்த்தான்!”
ஊர்மட்டும் இருந்ததவன் வீடங் கில்லை!
    உசாவியதில், இருப்பிடத்தை யாரோ சொன்னார்.
“சீர்கெட்டாள் வாழ்வதற்கு விடவோ?” என்று,
    சிறிஎழுங் கடலலைபோல் பாய்ந்து சென்றான்!
“யார் ? எட்டிப் போம் உடனே !” என்ற நீலா:
    “ஏதுமக்கே என்மீதில் உரிமை?” என்றாள்!


“முன்பொருநாள் தாலிகட்டிச் சென்றீர்! அன்று.
    முதியவளின் மரணத்தால் தனித்தேன்! நீரோ.
முன்பனியாய் மூடுபனி போல நின்றீர்;
    முறைகெடவுங் காரணமாய் ஆனீர்! ஆனால்,
பின்பணியாய்த் தண்பனியாய் வந்தே, எம்மைப்
    பேணிவரக் கந்தப்பன் இலாதி ருந்தால்...
என்பொழுது விடிந்திடுமோ” என்று கூறி,
    இரட்டைத்தாழ் இட்டுவிட்டாள் நீலா! தப்பா?

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/15&oldid=1383238" இலிருந்து மீள்விக்கப்பட்டது