பக்கம்:கனியமுது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படர்கின்ற முல்லைக்குக் கொழுகொம் பாகப்
பாரிவள்ளல் தேர்ஈந்து புகழ்பெற் றாற்போல்-
தொடர்வண்டிச் சந்திப்பில் ஆட்சி செய்யும்
துரைசாமிக் குருடனுக்கோர் செங்கோல் தந்து,
இடறிவிழா வண்ணமவன் நடந்து, பிச்சை
எடுப்பதற்கு வகைசெய்த வள்ளல் யாரோ?
அடர்துன்பச் சிந்தனைகள் அணுவு மின்றி,
அன்றாடத் தேவைபெற்று, நிறைவாய் வாழ்ந்தான்.

பண்பாடித் திரட்டிவந்த நாண யத்தைப்
பழங்கந்தை முனையினிலே முடிச்சுப் போட
எண்ணியவன், இருந்தவற்றை எண்ணும் போதில்,
"எனக்கு மொரு பங்குதரு வாயா?" என்று,
தண்ணென்ற கரத்தாலே தோளைத் தொட்டாள்,
தங்கம்எனும் காலற்ற பிச்சைக்காரி!
கண்மூடி இருந்ததனால், காதல் ஊறும்

கருத்தையுமா மூடிவிட்டான்! இயலா தன்றோ?

5

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/16&oldid=1459280" இலிருந்து மீள்விக்கப்பட்டது