பக்கம்:கனியமுது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

செழுமையுடன் வளர்கின்ற குப்பை மேட்டுச்
    செடியைப்போல், ஏழ்மையிலும் சிறுமை யின்றி
முழுமையுடன் எழில்பெற்றாள்! பார்ப்போர் நெஞ்சில்
    மூண்டெழுந்த உணர்வெதையும் மதித்தி டாது
விழும்பிச்சைக் காசுக்குக் கையை ஏந்தி,
    விடாமற்பின்தொடர்கின்ற தம்பியோடு,
தொழும் வாழ்வில், புகைவண்டி நிலையத் தையே
    சுற்றிவந்தாள் தந்தைசொல் காத்து நின்றாள்!


“குருட்டுத்தம் பிக்காக உனது வாழ்வைக்
    குப்பையிலே குன்றிமணி போலாக் காதே!
வெருட்டிவிட்டு வந்துவிடு மறுத்தால், உன்னை
    விடமாட்டோம்; வெஞ்சிறையிலிடுவோ” மென்று
மருட்டியவர் ஏராளம்! எதையுங் கேட்டு
    மனமயக்கம் கொள்வதில்லை; தம்பி யின்றி
இருட்டில் அவள் செல்வதில்லை, இளமைக் கால
     ஏக்கத்தைச் சிறிதேனும் பெறுவ தில்லை!”

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/18&oldid=1383242" இலிருந்து மீள்விக்கப்பட்டது