பக்கம்:கனியமுது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தகம் விதைகள்


புத்தகத்தில் நுழைந்தவுடன், புகையும் தீக்குள்
    புகுந்துவிட்ட நிலைபெற்றாள்! தனக்கு முன்பே
சக்களத்தி எனத்தகுமோர் பெண்ணொ ருத்தி,
    சாகசமும், தந்திரமும், நடிப்பும் தேர்ந்தாள்;
துக்கமின்றிக் காதலன்தான் துணிந்து செய்த
    துரோகத்தை இடித்துரைக்கும் வலிமை யோடு,
பக்கபல மாகவொரு குழங்தை கையில்
    பரிமளிக்க, உரிமையுடன் விளங்கக் கண்டாள்!

மான்போல மருட்சியுடன் மயங்கி நிற்கும்
    மனைவியிடம், கணவனெனுங் காத கன்தான்
தேன்போலும் மொழியுரைத்தான்; “திருமணத்தால்
    சேர்ந்திட்ட நீ, எனக்கோ இரண்டாங் தாரம்!
நான்போகும் பாதையிலே குறுக்கி டாதே!
    நயங்தெம்மைப் பணிந்திடுவாய்; இன்றேல், தூண்டில்
மீன்போலத் துடித்திடவே நேரும்! வேறு
    மீள்வதற்கும் வழியில்லை; புரிந்து வாழ்வாய்!”

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/26&oldid=1380146" இலிருந்து மீள்விக்கப்பட்டது