பக்கம்:கனியமுது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


எளிமையெனும் சுழற்காற்றால் அணைந்தி டாத
எழில்விளக்காய்ச் சுடர்விட்ட மனைவி கண்டு
முழுமையுற்றோம் என்றெண்ணி, மூத்த பிள்ளை
முதலிரவின் இதங்காண முனைந்த போது...
வலிமைமிக்க சாவென்னும் பகைவன் வந்து
வளைத்திட்டான்! கிளைத்தெழுந்து படர்ந்து தாவிச்
செழுமையுற்ற பூங்கொடியும் சீர்கு லைந்து
சிதைந்ததந்தோ : வேதவல்லி செய்த தீமை


பொற்றாலி யோடெவையும் போகு மன்றோ?
பொல்லாத கைம்மையினுங் கொடுமை ஏது?
பெற்றாரின் பாழ்மனமும் பேத லிக்கப்-
பிறந்தகத்தை மறந்திடுமோர் நிலைமை யுற்றால்
குற்றேவல் புரிகின்ற சிற்றா ளாகக்
கூலியின்றிக் கிடைத்தவளை விடவா செய்வர்!
வற்றாத விழியருவி பொழியும் நீரால்-

மாமியாரின் சொல் நெருப்பை அணைத்து வந்தா

18

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/29&oldid=1459283" இலிருந்து மீள்விக்கப்பட்டது