பக்கம்:கனியமுது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




வானுங் கடலுமங்கு மோனக் கலவையிடத்,
தானுமக் காட்சியைக் காணும்பே ராவலுடன்,
காலைமுதற் காய்ந்து, ககனம் ஒளி பாய்ச்சி,
மேலைத் திசைமுழுகும் வெங்கதிர் ஞாயிறும்--
ஆர்த்துப் பொங்கியெழுங் தார்ப்பரித்துக் கை நீட்டி,
வேர்த்துத் துளிசிதறி, வேகமாய்த் தாவி,
நிலமகளை முத்தமிட்டு, நில்லாமல் ஓடி,
விலகி இசைபாடும் சங்கீத வெள்ளலையும்--
மாதர் முகமாய் மலர்ந்து,நல் சீதளத்தைத்
தீதறச் சிங்தித் திகழ்ந்து,பின் அந்திவரத்;
தேம்பிப் பிரிவேங்கிச் சீர்மங்கை மேல்முகடாய்க்
கூம்பித் தவிக்கும் குளிர்வாவித் தாமரையும்--
கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணத் தொலையாத
வண்ணப் புதுக்கோலங் தீட்டி வழங்கிவரும்
நீலப் பெருந்திரையின் நீளத்தில் நேர்த்தியாய்க்
காலம் வரும்வரையில் காத்திருந்து, காரிருளில்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/32&oldid=1380098" இலிருந்து மீள்விக்கப்பட்டது