பக்கம்:கனியமுது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

ஆணழகன் மன்மதன் ஆரணங்கின் பேரெழிலைக்
காண, அனுபவிக்கக் கண்கோடி வேண்டுமாம்!
தந்தங் கடைங்தெடுத்த சந்தன மேனியாள்:
சிந்தை கலக்கும் சேல்விழி: பால்மொழி;
கண்டனர் இருவரும்; உண்டனர் பார்வையினை!
விண்டனர் காதலை; விரைவாய் உரையாடி!
பெற்றோர் அறிந்தார், பிரித்தனரே காதலை...!
சற்றுப் பொழுதில் சரிந்ததவர் காதலும்!



இஃதே கவிஞர் எழுதிவரும் வாடிக்கை!
இஃதன்றி நேர்மாறாய் இன்னோ ருலகமும்
உண்டன்றோ? என்கண்ணால் கண்டது கூறுவேன்:-- பண்டொருநாள் என்றாலும் பான்மை மறையவில்லை;
பட்டப் பகல்வேளை; கொட்டும் பெருமழையில்,
வெட்ட வெளியிலொரு குட்டிச் சுவரருகில்,
கண்பார்வை யற்றிடப் பெண்பிறவி பெற்றதால்
புண்ணியங் தேடுவோர் பண்ணிய தர்மத்தில்

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/34&oldid=1380122" இலிருந்து மீள்விக்கப்பட்டது