பக்கம்:கனியமுது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


என்ன இந்த எதிர்வீட்டுச் சிறுக்கி மட்டும்.
என்னைவிடப் பேரழகி? வயது கொஞ்சம்;
பொன்னிறத்து மேனி; பெருங் கரிய கண்கள்;
பொலிவுதரும் உடற்கட்டு; புதுமை கோக்கு:
புன்னகையில் ஒரளவு கவர்ச்சி உண்டு;
பொய்பேசும் வழக்கமில்லை! இதனால் என்ன?
மன்னரெலாம் அவள்முன்னே வாழ்த்துக் கூறி
வணங்கிடவா வேண்டும்? இது கொடுமை யன்றோ?


என்னிடமும் பொருள்நிறைய உண்டென் றாலும்,
எதற்காக அவள்போல வழங்க வேண்டும்?
தன்னைவிட ஏழையர்மேல் இரக்கப் பட்டால்...
தன்னிலைமை கெட்டுவிட்டால் ஏது செய்வேன்?
முன்னிடத்தை நான்தேடி அமரச் சென்றால்
மூளியெனத் துாற்றுகின்றார், மூட மக்கள்!
என்னிதயம் என்தாழ்வைத் தாங்கி னாலும்,
ஏற்காதே அவள் உயர்வை; அறிவாய் தோழி!

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/37&oldid=1380164" இலிருந்து மீள்விக்கப்பட்டது