பக்கம்:கனியமுது.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

தத்துவப் பாடஞ் சொல்லுந்
தகைமையால் பட்டம் பெற்ற
வித்தகர் ஆகி வந்த
விரிவுரை யாளர் ஒர்நாள்
சத்துள கருத்தைச் சொல்லிச்
“சந்தேகம் உண்டா?” என்றார்,
நித்திரை கலைந்தாற் போல
இளங்கிளி விழித்து நின்றாள்!


பெண்மனப் போக்கின் ஆழம்
பிறராலே உணர்தல் ஆமோ?
தன்மனம் தேடிச் சென்ற
தத்துவ ஆசா னுக்கே
நன்மனை யாட்டி யானாள்,
நாடெலாம் வியந்து பேச
பொன்,மணி யாவுங் தந்து
பூரித்துச் சென்றார் பெற்றோர்!

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/40&oldid=1380196" இருந்து மீள்விக்கப்பட்டது