பக்கம்:கனியமுது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது



நினைத்தவா றின்ப வாழ்க்கை

நேர்ந்ததாய் நம்பிக் கைதான்!

தினைத்துணை அன்பும் இன்றித்

தேன்நிலவு இனிப்ப தெங்கே?

'பனைத்துணை படித்திருந்தும்,

பக்குவம் பெறாத வர்பால்

அனைத்துமே பாழ் பாழ்', என்றே

அரற்றினாள் பருவக் கிள்ளை!


வீசிடுந் தென்றற் காற்றில்

மிதந்திடும் மலரின் வாசம்

காசியைத் தொடுவ தில்லை;

நல்வினை நரம்பு போலப்

பேசிடுந் துணைவி சொற்கள்

பெருங்காதில் வீழ்வ தில்லை;

கூசிடா ஒப்ப னைகள்

கொண்டவர் காண்ப தில்லை!

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/41&oldid=1380051" இலிருந்து மீள்விக்கப்பட்டது