பக்கம்:கனியமுது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுருண்டமுடி, நேர்வகிடு, சிவந்த மேனி,

சுறுசுறுப்பாய் இயங்குகின்ற கால்கள், கைகள்,

மருண்டெதையும் நோக்காத மிதந்த பார்வை;

வாயிதழில் தொத்திகிற்கும் புன்ன கைதான்!

இருண்டநிறக் காற்சட்டை, முழுக்கைச் சட்டை,

ஏற்றவாறு தொங்குகின்ற கழுத்துப் பட்டை!

உருண்டோடி ஒன்றையொன்று துரத்திச் செல்லும்

உந்துவண்டி விரைவுகுன்றி, ஒரம் நிற்க- “,


இடக்கையில் கருப்புகிறச் சிறிய தோல்பை

எடுத்தவாறு கீழிறங்கி நேரே பார்த்தான்.

அடுக்கிவைத்த பெட்டிபோல உயர்ந்து நிற்கும்

அண்ணாந்தால் கழுத்துகோவும் மாடமொன்றில்

முடுக்கிவிட்டால் மேலேற்றும் படியில் சென்று

மூடியதும், பொத்தானில் விரலை வைத்தான்.

மிடுக்காக ஒர்கணத்தில் மூன்றாம் மாடி -

மீதிறங்கி, வெளியேறி, முன்னே நோக்கி,

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/44&oldid=1382700" இலிருந்து மீள்விக்கப்பட்டது