பக்கம்:கனியமுது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

எதிர்ப்புறத்தில் சாத்தப்பட் டிருந்த தான
    எழில்மிக்க கதவின்மேல் நளின மாக
அதிராமல் கைநுனியால் தட்டும் போதே
    'ஆ'வென்று திறந்திடவே-உள்துழைந்தான்
சதிராடும் மயில்போன்ற மங்கை நல்லாள்-
    “சரியான நேரத்தில் வந்திர்!” என்றே
புதிர்போட்டாள்; சாய்வாக அமரச் சொன்னாள்.
    “புறப்பட்டு வரும்வழியில் பயணம் நன்றாய்



இனிமையுடன் இருந்ததா?” என் றார்வத் தோடும்
    இன்சுவைநீர் சிற்றுண்டி தந்து கேட்டாள்!
“தனிமையினால் தவித்திருப்பீர்?” என்றாள். “என்றன்
    தங்கையினி உடன்வருவாள்; அச்ச மில்லை!
அநியாயக் குறும்பிஅவள்; பேச்சுக் காரி!
    அழகைப்போல் மிகுதியான அறிவும் உண்டு!
சனியனே இன்னுமென்ன வெட்கம்? உன்னைச்
சரியாகப் பார்க்கட்டும் உட்கார்!”: என்றாள்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/45&oldid=1383247" இலிருந்து மீள்விக்கப்பட்டது